கோவை : மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அச்சுறுத்தி வரும் பெண் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் மோளப்பாளையம் கிராமத்தில் கூண்டு அமைத்துள்ளனர்.
கோவை : மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அச்சுறுத்தி வரும் பெண் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் மோளப்பாளையம் கிராமத்தில் கூண்டு அமைத்துள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "செங்கணூர் கிராமத்தில் அந்தப் பெண் சிறுத்தை ஏற்கனவே இரண்டு ஆடுகளை அடித்துத் தின்று பசியாற்றியிருக்கிறது. மேலும், கன்றுக்குட்டி, நாய் என பிற விலங்குகளையும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அவர்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் தற்போது மோளப்பாளையம் கிராமத்திற்கு அருகில் கூண்டு அமைத்துள்ளோம்.

இரை தேடி வரும் சிறுத்தை அதில் அகப்படும்பட்சத்தில் தலைமை அதிகாரியிடம் கலந்தாலோசித்து அடர் காட்டுப்பகுதிகளில் கொண்டு விட்டு விடுவோம். சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் அவற்றின் இரையை மோப்பம் பிடித்து வரக்கூடியவை. எனவே, மக்கள் காட்டுப்பகுதிக்கு வெகு தொலைவில் வைத்து தங்கள் கால்நடைகளை வளர்த்தால் மனித - விலங்கு மோதலைக் குறைக்க முடியும்," என்கின்றனர்.