கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் 18 தமிழ்நாடு சேனல் ஆகியவை இணைந்து சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் ஆகியவை இணைந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கோவையில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் தங்களால் முடிந்த நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், பாய், 1,000 லிட்டர் தண்ணீர், பிரஷ், பேஸ்ட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, நாப்கின், சேலை போன்ற 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்டது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் 800 பேருக்கு வழங்கும் வகையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு மன்ற உறுப்பினர்கள் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டனர். சேகரிக்கபட்ட பொருட்கள் லாரி மூலம் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க மன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கிளம்பி இன்று அதனை வழங்க உள்ளனர்.