கோவை : தூத்துக்குடி மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகி, கோவையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட நிலையில், 3 நாட்களாக நடந்த மீட்பு பணிகளுக்கு பிறகு போலீசார் சடலத்தை இன்று மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் ஜெயவேணு (36). இவர் ஏரல் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளராக இருந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை, அடிதடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவர் கோவைக்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்தள்ளார். ஆனால், வந்தவர் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பாததைத் தொடர்ந்து, அவரது அண்ணன் ஜெய்சுரேஷ் மற்றும் உறவினர்கள் கோவைக்கு தேடி வந்துள்ளனர். இங்கு வந்து அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது ஜெயவேணு ஏற்கனவே தூத்துக்குடிக்கு சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, எங்கு தேடியும் ஜெயவேணு கிடைக்காததால், அவரது மனைவி துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது கணவரின் நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, துடியலூர் காவல்நிலையத்தில் சுரேசை அழைத்து விசாரிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்குள் அன்று இரவே சுரேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தனிப்படை அமைத்து அவரது நண்பரும், உறவினருமான ராஜேசை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெயவேணு, சுரேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய மூவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயவேணு, ராஜேஷை கண்ணத்தில் அறைந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ் அருகில் இருந்த சுத்தியை எடுத்து ஜெயவேணுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலையை மறைக்க முடிவு செய்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் தங்களது இருசக்கர வாகனத்தில் ஜெயவேணுவின் உடலை வைத்து கட்டி அருகில் உள்ள சண்முகம் என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 100 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றது அம்பலமானது.

இதையடுத்து, ராஜேஷ் கொடுத்த தகவலின்படி, போலீசார் ஜெயவேணுவின் சடலம் வீசப்பட்ட கிணற்றில் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணியில் இன்று அவரது சடலம் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் தாசில்தார் மற்றும் போலீசார் முன்னிலையில் கோவை அரசு மருத்துவமனை சட்டம் சார்ந்த மருத்துவத்துறை ஜெய்சிங், பிரேத பரிசோதனை செய்தார். மேலும், கொலை குற்றவாளி ராஜேசை கொலை நடந்த இடம் முதல் கிணற்றில் வீசியது வரை போலிசார் வீடியோ எடுத்து விசாரணையில் ஈடுபட்டனர்.