அலகுமலையில் தீண்டாமை வேலி அமைக்கப்பட்ட இடத்தில் தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணைய துணை தலைவர் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமை வேலி அமைக்கப்பட்ட இடத்தை தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமை வேலி அமைக்கப்பட்ட இடத்தை தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். 

அலகுமலை கிராமத்தில் கடந்த மாதம் ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு பொதுமக்கள் வசிக்கும் இடத்தினை சுற்றி கம்பி வேலி அமைத்தனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் கொண்டு வரவும், அப்பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றுவரவும் 2 கி.மீ வரை சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. இப்பிரச்சினைக்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் அறிவித்ததையடுத்து, அப்பகுதி காங்கீரீட் சாலையில் வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி மட்டும் அகற்றப்பட்டது. 

இந்த நிலையில், திருப்பூர் வந்திருந்த தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் அப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டபின் அறநிலையத்துறை மற்றும் கம்பிவேலி அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் தரப்பினரிடமும் விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார். 

மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்ட கம்பிவேலி முழுமையாக அகற்றப்பட வேண்டும் எனவும் அலகுமலை பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் மனு அளித்தனர். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் உடனிருந்தனர் .

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...