வோடாஃபோன் நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்த கோவை மாநகராட்சி

கோவை : இந்திய உணவுக்கழக சாலையில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுத்திய வோடாஃபோன் நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சத்தை கோவை மாநகராட்சி அபராதமாக விதித்தது.

கோவை : இந்திய உணவுக்கழக சாலையில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுத்திய வோடாஃபோன் நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சத்தை கோவை மாநகராட்சி அபராதமாக விதித்தது. 

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண். 41-ல் இந்திய உணவுக்கழக சாலையில் ‘வோடஃபோன்’ நிறுவனத்தார் தரையில் பள்ளம் தோண்டி தொலை தொடர்பு கேபிள்களை பதித்துள்ளனர். மாநகராட்சியிடம் முறையாக அனுமதி ஏதும் பெறாமல் இந்த கேபிள்களை பதிக்கையில் இந்திய உணவுக்கழக சாலையில் செல்லும் மாநகராட்சி பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாகியதுடன் அப்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க இயலாமல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதுடன், மாநகராட்சிக்கு அவப்பெயர் வரக் காரணமாக இருந்ததால் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் உத்திரவின்படி, ‘வோடஃபோன்’ நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...