கோவை : காந்திபுரம் 6-வது வீதியில் புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பரபரப்பான இப்பகுதியில் ஏற்கனவே 9-வது வீதியில் மதுபானக் கடை இயங்கி வரும் நிலையில், தற்போது 6-வது வீதியில் புதிய மதுபானக் கடை திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் மதுபானக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் அந்த மதுபானக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "இங்கு வணிக வளாகங்கள் நிறைய உள்ளன. ஏராளமான பெண்கள் வேலைக்கு வந்து சென்று கொண்டு இருக்கும் இந்த சாலையில், புதிய கடை திறக்கப்பட்டால் பாதுகாப்பற்றச் சூழல் ஏற்படும். இங்கு மதுபானக் கடை திறக்கக் கூடாது," என்றனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காட்டூர் போலீசார் இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.