நீலகிரி : பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் யோகா போட்டிகள் இன்று உதகையில் நடைபெற்றது.
நீலகிரி : பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் யோகா போட்டிகள் இன்று உதகையில் நடைபெற்றது.
உதகையில் உள்ள அண்ணா உள்விளையாட்டு அரங்கில் உதகை ஆசியா கராத்தே சங்கம், நீலகிரி மாவட்ட யோகா சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் யோகா போட்டிகள் இன்று நடைபெற்றன இப்போட்டிகளில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கம், உடல் ஆரோக்கியம், மற்றவர்களுக்கு மரியாதை அளிப்பது, எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய திறமைகளை வளர்ப்பதற்காக இப்போட்டிகள் நடத்தப்படுவதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
