அங்கீகாரப் போராட்டத்தை புறக்கணித்து, கஜா புயலால் ஏற்பட்ட இருளைப் போக்க பாடுபடும் ஒப்பந்த ஊழியர்கள்

கோவை : கோவை மண்டலத்திலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்களை சீர்செய்யும் பணியில் கொட்டும் மழையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை : கோவை மண்டலத்திலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்களை சீர்செய்யும் பணியில் கொட்டும் மழையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நவம்பர் 16-ம் தேதி தமிழகத்தை கஜா புயல் தாக்கியது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாற்றிலே இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், இந்த மாவட்டங்களில் மின் தடைகளை சரி செய்ய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மின்சார ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் முயற்சித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை மண்டலத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் திருவாரூர் மாவட்டம் திருமாங்கோட்டை பகுதியில் சுமார் 2 நாட்களாக டிரான்ஸ்ஃபார்மர் நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு டிரான்ஸ்ஃபார்மர் சரிசெய்த போதும், மெயின் கம்பங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக இன்னும் டிரான்ஸ்ஃபார்மர் இயங்கவில்லை. இருப்பினும், கொட்டும் மழையில் அதனை இயங்க வைக்கப் போராடி வருகின்றனர்.



அவ்வாறு அந்த டிரான்ஸ்ஃபார்மர் இயங்கும்பட்சத்தில் 7 நாட்களுக்கும் மேலாக இருளில் தவிக்கும் அருகில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கும். இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும். மின்சாரம் சரி செய்யப்பட்டு இருளில் தவித்த கிராமங்களுக்கு வெளிச்சம் கிடைக்கும். ஆனால், ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 380 கிடைக்குமா..? வாழ்க்கை வெளிச்சம் அடையுமா..? என்று காத்துகிடக்கின்றனர். 

ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியத்தில் போதிய அங்கீகாரம் இல்லை என்ற பொழுதிலும், அதற்கான பல போராட்டங்கள் நடத்தியும், உரிய அங்கீகாரம் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனினும், கஜா புயலுக்கு முன் ஒட்டு மொத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம் என முடிவு எடுத்து அதற்கான போராட்டத்தை முன் எடுக்கலாம் என்ற நிலையில் தான் கஜா புயல் தமிழகத்தை தாக்கியது.

இதனிடையே, அங்கீகாரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மக்களுக்கு பணியில் ஈடுபட வேண்டும் என அவர்கள் தற்போது களத்தில் உள்ளனர். புயல் பணிகளுக்கு பின்னாவது தமிழக அரசாங்கம் அங்கீகாரம் அளிக்குமா..? என்கிற எதிர்பார்ப்பில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா ராஜேந்திரன் கூறுகையில், " இவ்வாறு பணியில் ஈடுபடும் எங்களுக்கு பணியின் போது விபத்து ஏற்பட்டு உயிரிழிப்பு அடைந்தாலும் கூட அதற்கான இழப்பீட்டை போராடி தான் பெற வேண்டியுள்ளது. மக்களுக்காக நாங்கள் உழைக்கிறோம் எங்களுக்கு மக்கள் உறுதுனையாக இருப்பார்கள் என நம்புகிறோம்.

இனியாவது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரியு ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்கிட வேண்டும்," என்றார்.

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் தேவணாங்குறிச்சியை சேர்ந்த மோகன் என்கிற இரு ஒப்பந்த தொழிலாளர்கள் நவம்பர் 20-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் பணிகளின் போது மின்சார தாக்கி படுகாயம் அடைந்தனர். இது மட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்கள் மின்வாரியத்தில் அங்கீகாரம் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். மாதம் ஒரு விபத்தும் நடந்துதான் வருகிறது ஆனாலும் கூட இழப்பீடு வாங்க போராடும் நிலைதான் உள்ளது என ஒப்பந்த ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "இயற்கை சீற்றங்கள் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மின்கம்பங்களை சீர் செய்வது என அனைத்து மின் பணிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை. 

அதுமட்டுமல்ல, சாதாரண நாட்களில் பணிகளின் போது விபத்து ஏற்படும் பட்சத்தில், அதிகாரிகள் கூட வந்து நேரில் பார்ப்பது இல்லை. உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைக் கூட பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் பெற வேண்டியுள்ளது," என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், "மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மக்களுக்காகப் பாடுபடும் அவர்களது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்," என்றார்.

கோவை மண்டலத்தைச் சார்ந்த மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவிக்கையில், புயல் பாதித்த பகுதிகளில் பணிகள் நிறைவடைந்த பின்பு மின்துறை அமைச்சர் தமிழக முதலமைச்சரிடம் பேசி, இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வார், என்றார். ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, அவர்களது கோரிக்கை நிறைவாக வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...