நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலை அருகே உள்ள கார்குடி சாலையில் உலாவரும் கரடியால் அந்தப் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலை அருகே உள்ள கார்குடி சாலையில் உலாவரும் கரடியால் அந்தப் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.
தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் முதுமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்து தங்கிச் செல்வார்கள். மேலும் ,இப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டமும் அவப்போது காணப்படும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக முதுமலை கார்குடி சாலையோரத்தில் கரடி ஒன்று சுற்றி வருகிறது. வனவிலங்கான கரடி மனித வாழிடங்களுக்குள் வந்ததைக் கண்டு மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.