கோவையில் பள்ளி வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; 3 மாணவர்கள் படுகாயம்

கோவை: கோவை சாயிபாபாகாலனி, என்.எஸ்.ஆர் சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பள்ளி வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கோவை: கோவை சாயிபாபாகாலனி, என்.எஸ்.ஆர் சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பள்ளி வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.



கோவையில் உள்ள தடாகம் சாலை, மருதமலை சாலை, மேட்டுப்பாளையம் சாலை போன்ற வழித்தடங்களில் செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் பெரும்பாலும் விதிகளை மீறி அதிவேகமாகச் செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கும், மற்ற வாகனங்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் தனியார் பேருந்துகள் இயங்கி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், இன்று காலை என்.எஸ்.ஆர் சாலையில் Tn66Q1435 காந்திபுரம் டூ மருதமலை செல்லக்கூடிய மயில் என்ற தனியார் வாகனம் அதிவேகமாக வந்தது. சாலை விதிகளை மீறி வந்த பேருந்து, பள்ளி மாணவர்கள் சென்ற காரின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். அருகிலிருந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 



பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலே வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தினை கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் அதிவேகமாக ஓட்டி வரும் தனியார் வாகனங்களைக் கட்டுப்படுத்த போக்குவரத்துத்துறை முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...