கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் 110வது பிரதேச ராணுவப்படை பிரிவுக்கான ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது.
கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் 110வது பிரதேச ராணுவப்படை பிரிவுக்கான ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது.

கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நேற்று ராணுவ வீரர்கள், கிளார்க், சமையலர்கள் என மொத்தம் 37 காலிப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி திருச்சி சேலம் நாமக்கல் திருப்பூர் ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அதேபோல கர்நாடகா கேரளா, ஆந்திரா, குஜராத், தெலுங்கானா போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் முதற்கட்டமாக அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு இன்று முதல் 28ம் தேதி வரை மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும். அதன் பின்னர் இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.