மேட்டுப்பாளையத்தில் பூத்துக்குலுங்கும் ஆப்பிள் மரப்பூக்கள் : பூக்களை சுற்றும் தேன் சிட்டுக்கள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் வளரும் ஆப்பிள் மரத்தில் செந்நிறப்பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால், இவ்வாண்டு ஆப்பிள் பழங்களின் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் வளரும் ஆப்பிள் மரத்தில் செந்நிறப்பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால், இவ்வாண்டு ஆப்பிள் பழங்களின் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் என்னுமிடத்தில் ஆண்டு முழுவதும் நிலவும் சீரான சீதோஷ்ணநிலை காரணமாக கடந்த 1900-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை துவக்கப்பட்டது. இங்கு துரியன், வெண்ணைப்பழம், லிட்சி, மங்குஸ்தான், ரம்புட்டான், சிங்கப்பூர் பலா என பல்வேறு அரிய வகை மரங்கள் வளர்கின்றன. தற்போது இங்குள்ள மலேயன் ஆப்பிள் மரங்களில் கண்ணைக்கவரும் செந்நிற பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. 



இப்பூக்களில் உள்ள தேனை அருந்த ஏராளமான தேன்சிட்டுக்கள் இம்மரங்களை சுற்றிச்சுற்றி வருகின்றன. அடர் சிவப்பு நிறத்தில் கையலகத்தில் உள்ள இப்பூக்கள் ஆயிரக்கணக்கில் பூத்துள்ளதால் சுமார் 100 அடி உயரம் கொண்ட மலேயன் ஆப்பிள் மரங்கள் காண்போரை வியக்க செய்கின்றன. இவ்வாண்டு போதிய அளவில் பருவமழை பெய்துள்ள காரணத்தினால் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளதாகவும், இதனால், ஆப்பிள் விளைச்சல் அதிகரிக்கும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஆப்பிள் மரத்தில் பூத்துள்ள பூக்களின் அழகை காண கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...