மத்திய அமைச்சருக்கே இந்த கதினா...! சாதாரண பக்தர்களுக்கு என்ன நிலைமை இருக்கும் : கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கோவை : சபரிமலையில் மத்திய அமைச்சரையே கேரள அரசு இப்படி நடத்துகின்றது என்றால், கோவிலுக்கு வரும் சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை : சபரிமலையில் மத்திய அமைச்சரையே கேரள அரசு இப்படி நடத்துகின்றது என்றால், கோவிலுக்கு வரும் சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில் இந்தியன் ஆயில் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நேற்றைக்கு நிலக்கல் பகுதிக்கு தான் சென்ற போது பேருந்து நிலையம் மற்றும் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்துகள் பம்பை ப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து எஸ்.பி.யிடம் கேட்ட போது சாலை மோசமாக இருக்கிறது. நிலச்சரிவு ஏற்படுவதாக தெரிவித்தனர். ஏன் அனைவரையும் அனுமதிக்கவில்லை எனக்கேள்வி எழுப்பியதற்கு அங்கு போகும்போது பார்க்கச்சொல்கின்றனர்.

சபரிமலை கோவிலுக்கு செல்வது மத்திய அரசின் விஷயம் கிடையாது. மாநில அரசாங்கத்திடம் உள்ளது. 

எஸ்.பி. யதீஷ் சந்திராவின் உடல்மொழி தன்னிடம் பேசும்போது வித்தியாசமாக இருந்தது.

நிலக்கல் அருகே வந்தபோதுதான் தன்னுடன் வந்த இரண்டு காரை பம்பை பகுதியில் நிறுத்தி விட்டு தன்னுடைய காரை மட்டும் காவல் துறையினர் அனுமதித்துள்ளனர். திரும்ப பம்பை சென்று தன்னுடன் வந்தவர்களை அழைத்து வந்தனர். பின்னர் வந்த கண்காணிப்பாளர் தவறுதலாக காரை நிறுத்தி விட்டனர்.

இன்றைய சபரிமலையின் நிலையை ஐய்ப்ப பக்தர்கள் யாராலும் தாங்க முடியாது. யுத்த களம் போல் சபரிமலை இருக்கிறது. நிறைய தடுப்புகள் போடப்பட்டு பக்தர்கள் மிரட்டப்படுகின்றனர். மனிதாபிமான நோக்கத்தோடு பக்தர்களை அரசு அணுக வேண்டும். அறநிலைய துறையினர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மாலை அணிந்து கோவில் பகுதிக்கு செல்கின்றனர். சபரிமலையில் அதிகளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு கண்காணிப்பாளர் மாஸ்டர் பிளான் போட்டு இருக்கிறார். கோவிலை அழிக்கக்கூடிய வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.மண்டபத்தில் பஜனை பாடல்கள் பாடப்படும் மண்டபம் அமைதியாக இருக்கிறது.

சபரிமலை நிர்வாகம் கேரள அரசிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா..? . சபரிமலைக்கு அதிகமாக செல்லக்கூடிய மக்கள் ஒவ்வொருத்தரும் , கேரள அரசிற்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

பக்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில், நடைமுறைத்தப்படும் சட்டங்கள் பிரச்சனைகளை களைந்து, செயல்பட வேண்டும். சபரிமலைக்கு போகக்கூடிய பக்தர்களுக்கு கெடுபிடி இருக்கக்கூடாது. சபரிமலை கோவில் ஐயப்பனுக்கு சொந்தமானது ஐயப்பன் மக்களுக்கு சொந்தமானவர், அரசுக்கு அல்ல என்பதை கேரள அரசு புரிந்துகொள்ள வேண்டும். 

கேரள அரசின் குறிக்கோள் சபரிமலைக்கு, பக்தர்கள் வரக்கூடாது என்பதுதான். சபரிமலை தங்கி இருக்க நேரம் கிடையாது என்ற நிலையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மத்திய அமைச்சரையே கேரள அரசு இப்படி நடத்துகின்றது என்றால் சாதாரண மக்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.

சமையல் எரிவாயு குழாய் மூலம் விநியோகிக்கப்படுவது விலை குறைப்புக்கான விஷயங்களில் முதன்மையான விஷயம். கஜா புயல் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு சென்று இருக்கின்றது. தமிழக அரசு புயலுக்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகளை பார்க்கும் போது மிகச்சிறப்பாக இருக்கிறது. தற்போது சாலையிலுள்ள தடைகளை அகற்றினால் மட்டுமே கிராமத்திற்குள் செல்லும் நிலை இருக்கிறது. ஒருசிலர் கஜா புயல் விவகாரத்தை அரசியல் ஆக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.கஜா புயல் குறித்து தமிழக அரசு அறிக்கை கொடுக்கவில்லை. அறிக்கை கிடைத்த பின்புதான் தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா..? என்பது தெரியும். பாரதப் பிரதமர் பாதிப்பு ஏற்பட்டால் வராமல் இருந்ததில்லை. அவருக்கு பல வேலைகள் இருப்பதால் மற்ற அமைச்சர்களை வைத்து தெரிந்து வருகிறார். உள்துறை அமைச்சர் ஏற்கனவே தமிழக முதலமைச்சரிடம் பேசியிருக்கிறார். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க மற்ற மத்திய அமைச்சர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...