கோவையில் மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் காற்று வாங்கிய இருக்கைகள் : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி

கோவை : கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்ததால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை : கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்ததால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.



நாடு முழுவதும் 129 மாவட்டங்களில் பயன்பெறும் வகையில் 63 இடங்களில் நகர எரிவாயு விநியோக திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் துவங்கி வைத்தார். தமிழகத்தில் கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகிக்கும் டென்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் எடுத்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கோவை கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொளி மூலம் இந்த திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய தென்னை வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ், பா.ஜ.க. மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- சுற்றுச்சூழல் பிரச்சனைதான் உலக அளவில் முக்கியதுவம் பெற்றுள்ளது. வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படும் எரிப்பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும். இதனை சரி செய்ய இயற்கை எரிவாயுக்கு மாறியாக வேண்டும். காற்றில் இருக்கும் கார்பன் அளவை குறைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக நடப்பது போல தமிழகத்தில் கோவை உட்பட பல மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த படுகிறது. வருகின்ற காலத்தில் கோவை மாவட்டம் சிங்கபூராக மாறும் நிலை ஏற்படும், என்றார்.



கோவை கொடிசியா அரங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் மேடை வடிவமைக்கப்பட்டு, இருக்கைகளும் போடப்பட்டு இருந்தது. ஆனால், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், பாரதிய ஜனதா கட்சியினர் என 200 பேர் வரை மட்டுமே வந்திருந்த நிலையில்,அரங்கில் இருந்த 800 இருக்கைகள் காலியாகவே கிடந்தது. பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வருவார்கள் என எண்ணி இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் ஆயிரக்கணக்கான ஏராளமான இருக்கைகளை ஏற்பாடு செய்து இருந்த நிலையில் இந்த விழாவில் சொற்பமான அளவிலேயே தொண்டர்கள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...