தடாகம் பகுதியில் உலா வரும் காட்டு யானைகளைப் பிடிக்க வனத்துறை ஆணை

கோவை : கோவை மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையின்படி, தடாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கான ஆணை மாவட்ட வனத்துறையினருக்கு வழங்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையின்படி, தடாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கான ஆணை மாவட்ட வனத்துறையினருக்கு வழங்கப்பட்டது. 

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காட்டு யானைகள் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இதனால், ஏற்படும் மனித-விலங்கு மோதல்களால், உயிர் பலியும் ஏற்படுகிறது. குறிப்பாக, சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு யானைகள்தான் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரி ஒருவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது. 

இதனால், காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பதற்காக, முதுமலையில் இருந்து பொம்மன், விஜய், சேரன் மற்றும் ஜான் ஆகிய 4 கும்கி யானைகள், வரப்பாளையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளன. மேலும், இந்த கும்கி யானைகளை விட இரு காட்டு யானைகளும் உருவத்தில் பெரியது என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவது அரிதான காரியமாகவே கருதப்படுகிறது. இதனிடையே, கும்கி யானைகள் இருக்கும் வரப்பாளையம் முகாமிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற கோவை மாவட்ட ஆட்சியரிடம், விவசாயிகள், சின்னதம்பி, விநாயகன் யானைகளினால் விவசாய நிலங்கள் சீரழிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து, தடாகம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இரு காட்டு யானைகளை பிடிக்குமாறு கோவை மாவட்ட தலைமை வனப் பாதுகாவலருக்கு மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கடிதம் ஒன்றை எழுதினார். அதனடிப்படையில், கோவை வனத்துறையினருக்கு யானைகளை பிடிக்குமாறு தலைமை வனப் பாதுகாவலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்துள்ளார். 

"நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு காட்டு யானைகளின் நடமாட்டத்தையும், அவை ஏதேனும் தீங்கு விளைவிக்கின்றனவா..? என்பதை எங்களது குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், நேரம் மற்றும் திட்டம் தேவைப்படுகிறது. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்," என்றார். தலைமை வனப் பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்ஸவா.

 

இதனிடையே, பெரிய உருவம் கொண்ட இந்தக் காட்டு யானைகள் பிடிபடும்பட்சத்தில், முதுமலை அல்லது ஆனைமலை யானைகள் முகாமிற்கு லாரிகளில் அழைத்துச் செல்வதால், அதனது இயல்பு மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, சாடிவயல் முகாமில் வைத்து, கும்கி யானைகளுக்கான பயிற்சிகளை கொடுக்கலாம் எனில், முகாமின் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காட்டு யானைகளை பிடிப்பதற்கான சரியான வழிகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...