கோவை : கோவை மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ. 19,448.53 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று நபார்டு வங்கியின் 2019-20-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ரூ. 19,448.53 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை வெளியிட்டார். முதல் பிரதியை ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் சேதுராமன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது :- இத்திட்டத்தை செயலாக்குவதில் வங்கிகள் முழு முனைப்புடன் செயல்படவேண்டும். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், வங்கிகளின் சேவை இத்துறைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. நிகழ் ஆண்டைக் காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதி தேவை 6.61 சதவீதம் உயர்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்த நிதி ஆற்றல் ஆன ரூ. 19,448.53 கோடியில், வேளாண் மற்றும் இணை தொழில்களுக்கு 39.55 சதவீதமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 42.02 சதவீதமும், இதர தொழில்களுக்கு 18.43 சதவீதமும் இருக்கின்றது.
மேலும், நபார்டு வங்கியின் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே வங்கிகளுக்கான கடன் திட்டத்தை முன்னோடி வங்கி தயாரிக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் சேதுராமன், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் வெங்கட்ராமன், நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி வசீகரன், மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.