கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பதிமூன்றாவது துணைவேந்தராக தோட்டக்கலை துறையின் பேராசிரியர் என்.குமார் ஆளுநரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "உலகத்தரமான திறமை சார்ந்த கல்வியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுவே, அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். மேலும், வேளாண் துறையில் தொழில் முனைவோருக்கான மையங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் தான் பிற மாநில மாணவர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வல்லமை கொண்டவை.
மேலும், என் பதவியில் முதல் நடவடிக்கையாக கஜா புயலால் சிதைந்து போன பகுதிகளை மதிப்பீடு செய்து, மறுசீரமைப்பு செய்ய தேவையான திட்டங்களை உருவாக்கி அதன் அடிப்படையில், அரசுடன் இணைந்து செயல்பட போகிறோம்." என்றார்.