கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது இரண்டு நாள் வருமானத்தை நிவாரணமாக அளித்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அண்மையில் வீசிய கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை முழுவதும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என கோவை மாவட்டம் கணபதியை அடுத்த சங்கனூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் எண்ணினார்.

அதன்படி, இரண்டு நாட்கள் ஆட்டோ ஓட்டும்போது கிடைக்கும் வருமானத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடிவு செய்து, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆட்டோவை ஓட்டியுள்ளார். இதில், கிடைத்த வருமானம் மற்றும் பயணிகளிடமும் நிவாரணம் பெற்று அதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன். 2 நாட்களாக ஆட்டோ ஓட்டியதில் கிடைத்த வருமானம் மற்றும் பயணிகள் வழங்கிய நன்கொடைகளைச் சேர்த்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன். ரூ. 3,000 நிவாரணமாக அளித்துள்ளேன். ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போராட்டம் போது மூன்று நாட்கள் இலவசமாக ஆட்டோ ஓட்டினேன்," இவ்வாறு அவர் கூறினார்.