திருப்பூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான உடைகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அனுப்பியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் குழுக்கள் மூலம் உணவு, குடி நீர் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் கஜா புயலால் பாதிப்படைந்த டெல்டா மாவட்ட மக்களுக்கு தேவையான உடைகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்குமான பின்னலாடைகள், வேட்டி, சட்டைகள் மற்றும் சேலைகள் என ரூ.45 லட்சம் மதிப்பிலான அனைத்து வகையான உடைகளும் மூன்று லாரிகள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.