கோவை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த கடிதத்தில் இடம்பெற்ற தவறான தகவல்கள்

கோவை: கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் காட்டு யானைகளை அப்புறப்படுத்த நேற்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதில் துணை அலுவலர்களின் கவனக்குறைவால் தகவல் தவறாக பதிவாகியுள்ளன.

கோவை: கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் காட்டு யானைகளை அப்புறப்படுத்த நேற்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதில் துணை அலுவலர்களின் கவனக்குறைவால் தகவல் தவறாக பதிவாகியுள்ளன.

கடந்த திங்கள் கிழமை கோவையில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் தடாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் விவசாயிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளை வெளியேற்ற மனு கொடுத்தனர். இதனைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சென்னையில் இருக்கும் முதன்மை வனவிலங்கு பாதுகாப்பாளருக்கு கடிதம் எழுதினார்.



இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25-ம் ஆம் தேதியில் ஆர்.ஆர்.டி பிரிவைச் சேர்ந்த (RRT) வெங்கடேஷ் (28) காட்டு யானையை கிராமத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் யானையால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை மாவட்ட ஆட்சியரின் கடிதம் வெறுமனே காயம் அடைந்ததாக தவறாக பதிவு செய்திருந்தது. மேலும், தடாகம் பகுதியில் மக்கள் வாழ்விடத்தில் தொல்லைகள் ஏற்படுத்தும் ஒற்றை யானையை கும்கி யானைகளை பயன்படுத்தி பாதுகாப்பாக முதுமலை வனப்பகுதியில் கொண்டு விட முயற்சி மேற்கொள்ளச் சொல்லி குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த பகுதியில் சின்னதம்பி, விநாயகம் என இரண்டு யானைகள் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. 



மனித-விலங்கு மோதல்களைக் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த கடிதத்தில் துணை அலுவலர்களின் கவனக்குறைவால் தவறான தகவல்கள் அச்சாயிருக்கின்றன. அதனை சரி செய்து மீண்டும் வனப்பாதுகாப்பாளருக்கு கடிதம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...