திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து: தொழிலாளர்கள் படுகாயம்

திருப்பூர்: திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் தனியார் நிறுவன பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பேருந்து மூலம் பல்லடத்திலிருந்து தினந்தோறும் தொழிலாளர்களை ஏற்றி வருவது வழக்கம். அதேபோல், இன்று காலை பல்லடத்திலிருந்து கிளம்பிய பேருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தது.



அப்போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்ததில் பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 



உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...