நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் சாரல் மழை மற்றும் கடுமையான குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் சாரல் மழை மற்றும் கடுமையான குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் இன்று காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், இப்பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடும் குளிரை சுற்றுலாப் பயணிகள் ரசித்து அனுபவித்தாலும் இயற்கை காட்சிகளை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெம்மை ஆடைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளில் பலர் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.