கோவை: யானை தந்தம், புலி பல் கடத்தியதாக இருவரை வன குற்ற தடுப்பு பிரிவினர் நேற்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர்.

பன்னிமடை அருகே இந்த கடத்தல் நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வன குற்ற தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கார்கள் இருந்தது.
தொடர்ந்து அந்த காரை சோதனையிட்டனர். அப்போது அதில் யானை தந்தம் மற்றும் புலியின் பல் இருந்தது. தொடர்ந்து அவற்றை கடத்த முயன்ற கேரளாவை சேர்ந்த முருகேஷ் (27), பேரூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (32) ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.