கோவை : கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் வெப்ப நிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், இரவு நேரத்தில் 20 முதல் 21.5 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும், வீசும் காற்றின் வேகம் 5 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
ஒரு வருடத்தின் முழுமைக்கும் கோவைக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு 674 மிமீ ஆகும். ஆனால், வருடம் முடிய ஒரு மாதம் உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் 830 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது." என்றார்.