நீலகிரி : நீலகிரி தேசிய நெடுஞ்சாலையில் சண்டையிட்ட இரண்டு ஆண் காட்டெருமைகளின் கொம்புகள் ஒன்றுடன் ஒன்று மாட்டிக் கொண்டதை வனத்துறையினர் போராடி பிரித்து விட்டனர்.

குன்னூர் அருகே கட்டபெட்டு, வெஸ்ட்புரூக் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு ஆண் காட்டெருமைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டதில், அதன் கொம்புகள் மாட்டிக் கொண்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கட்டபெட்டு வனசரக அலுவலர் கணேசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் விக்ரம், மூர்த்தி, மணிகண்டன் உள்ளிட்ட பணியாளர்கள் குழுவாகச் சென்று மாட்டிக் கொண்டிருந்த காட்டு எருமைகளின் கொம்புகளை பிரிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.

கட்டபெட்ட, வெஸ்ட் புரூக் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே இவை வந்தபோது சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி காட்டு எருமைகளை பாதுகாப்புடன் சாலையின் கீழ்புறமுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்திற்குள் துரத்தினர். பின்னர் பட்டாசு வெடித்தும், சப்தம் எழுப்பியும் மாடுகளை வேகமாக துரத்தியதால் அதன் கொம்புகள் தானாக பிரிந்தன. இதன் காரணமாக கட்டபெட்டு, வெஸ்ட் புரூக் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.