கோவை : கோவையில் பள்ளிகளில் சேகரிக்கப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கஜா புயல் பாதித்த நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் அனுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அதில், 176 பள்ளிகளில் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் திரட்டப்பட்டன. அவை, ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் மேல் நிலைப்பள்ளியில் இருந்து இன்று 2 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள பொருட்கள் நாளை 2 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்தப் பொருட்கள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு பிரித்து தரப்பட உள்ளது.