நீலகிரி : மிலாது நபி திருநாளை முன்னிட்டு உதகையில் மதநல்லிணக்க பேரணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுக்க இன்று நினைவு கூறப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபி திருவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை சிறப்பிக்கும் நோக்கில் உதகையில் ஈதே மீலாதுன் நபி விழா மற்றும் மதநல்லிணக்கப் பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “நபிகள் நாயகம் கூறியது போல் தனிநபர் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்,” என்றார்.

இதைத் தொடர்ந்து, மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில் மர்க்கஸ் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்த்தவர் என மத பேதம் இல்லாமல் அனைவரும் கலந்து கொண்ட பேரணியை உதகை மத்திய பள்ளிவாசலில் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.