நீலகிரி : கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
நீலகிரி : கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் கஜா புயலால் தமிழகத்தில் திருவாருர், கடலூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களுக்காக அரிசி, பருப்பு, காய்கறிகள், தண்ணீர், பிஸ்கட், தேயிலைதூள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியா இன்று அனுப்பி வைத்தார்.