நீலகிரி : மலை சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது.

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- மலை சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு மலை ரயில் இன்று இயக்கப்படுகிறது. இதில், 7 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு சுற்றுலா ஏற்பாட்டாளரும் பயணம் செய்தனர். டெல்லியில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் சிறப்பு ரயிலில் அவர்கள் பயணம் செய்தனர். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருக்கும் ரயில் அருங்காட்சியகத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.
இந்த ஆண்டில் மட்டும் சேலம் தெற்கு ரயில்வேவின் மூலம் மேட்டுப்பாளையம் - உதகைக்கு இயக்கப்படும் 2-வது சிறப்பு ரயிலாகும். இந்த சிறப்பு ரயிலின் மூலம் ரயில்வே துறைக்கு ரூ. 2.83 லட்சம் வருமானம் கிடைத்தது.