Exclusive: உதகையில் பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாத 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்த தனியார் நிறுவனம்

நீலகிரி : உரிய பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாததால் உதகை அரசு மருத்துவமனையில் சேவை செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தினை தனியார் நிறுவனத்தினர் கோவையில் வைத்து பறிமுதல் செய்தனர்.

நீலகிரி : உரிய பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாததால் உதகை அரசு மருத்துவமனையில் சேவை செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தினை தனியார் நிறுவனத்தினர் கோவையில் வைத்து பறிமுதல் செய்தனர்.



நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனையில் ஐந்து 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் ஏற்படும் பழுது மற்றும் பாரமரிப்பு பணிகளை காரமடை பகுதியில் உள்ள ஜெ.பி. வாகன பராமரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. இதற்கான தொகையை ஆம்புலன்ஸ் நிர்வாகம் மாதாமாதம் செலுத்தி வந்தது. 

இந்த நிலையில், TN 01 G 5398 என்ற எண் கொண்ட வாகனம் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மார்ச் மாதம் காரமடை பகுதியில் உள்ள ஜெ.பி வாகன பராமரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சர்வீஸ் கட்டணத் தொகை ரூ.62 ஆயிரம் செலுத்தாமல் 108 நிறுவனத்தினர் இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று உதகையிலிருந்து நோயாளிகளோடு அந்த 108 வாகனம் கோவைக்கு வந்தது. நோயாளிகளை கோவை அரசு மருத்துவமனையில் இறக்கிய பின் உதகைக்கு செல்லும் போது, காரமடைப் பகுதியில் வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தை சர்வீஸ் செய்த நிறுவனத்தினர் முற்றுகையிட்டு பறிமுதல் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 



இது தொடர்பாக அந்த வாகன பராமரிப்பு நிறுவனத்திடம் கேட்ட போது, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதற்கான தொகையை ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும், எந்தப்பதிலும் செலுத்தவில்லை எனக் கூறினர். எனவே, ஆம்புலன்ஸை பறிமுதல் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

மேலும், இதேபோல, பல ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல, பொதுமக்களுக்கு சேவை செய்யும் இந்த 108 நிர்வாகத்தின் மீது பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் நிர்வாகத்தால், எஞ்சிய தொகையினை தனியார் வாகன பராமரிப்பு நிறுவனத்திற்கு செலுத்தி ஆம்புலன்ஸ் இன்று மீட்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...