நீலகிரி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நீலகிரி: நீலகிரியில் கடந்த வாரம் பெய்து வந்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீர் பற்றாக்குறை தீர வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரியில் கடந்த வாரம் பெய்து வந்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீர் பற்றாக்குறை தீர வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் நீர் சேமிப்புக்காக அதிக நீர்ப்பிடிப்பு கொண்ட பகுதிகளில் பல்வேறு அணைகள் கட்டப்பட்டன. தற்போது அந்த அணைகளில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு 845 மெகாவாட்டிற்கும் மேல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்காக முக்கூருத்தி, அப்பர்பவானி, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா மற்றும் பில்லூர் உள்ளிட்ட பல்வேறு அணைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

 

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக காலநிலை மாற்றம் காரணமாக நல்ல மழை பெய்தது. எதிர்பாராத விதமாக வந்த கஜா புயல் தாக்கத்தால் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்தது. குறிப்பாக பைக்காரா, அப்பவர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்க்கன் போன்ற நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மின் உற்பத்திக்கு மட்டுமில்லாமல் விவசாயம், குடிநீர் தேவைகளுக்கும் இந்த அணைகள் தான் ஆதாரமாக விளங்கி வருகின்றன.

மேலும், தற்போது பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவானது 100 அடியில் 87 அடி நீர் இருப்பும், கிளன்மார்கன் 33 அடியில் 27 அடி நீர் இருப்பும், பார்சன்ஸ்வேலி 58 அடியில் 53 அடி நீர் இருப்பும், போர்த்திமந்து அணையில் 132 அடியில் 130 அடியும், அப்பர்பவானியில் 210 அடியில் 175 அடி நீர் இருப்பும், அவலாஞ்சியில் 171 அடியில் 145 அடியும், எமரால்டு அணையில் 184 அடியில் 152 அடியும், குந்தா அணையில் 89 அடியில் 78 அடியும், கெத்தையில் 156 அடியில் 142 அடியாகவும் நீர் இருப்பு உயர்ந்துள்ளது.

இந்த நீர் மட்ட உயர்வால் மின் உற்பத்தி, குடிநீர், காய்கறி விவசாயத்திற்கென அனைத்திற்கும் தேவையான தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...