கோவை: கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் தொடர்ந்து நடக்கும் யானை-மனித மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர முதன்மை வன விலங்கு பாதுகாவலருக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தடாகம் பகுதியைச் சேர்ந்த 150 விவசாயிகள் இணைந்து அப்பகுதியில் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் சேதம் விளைவிக்கும் யானைகளைப் பிடித்து வேறு காட்டில் விடக் கோரி மனு அளித்தனர். அதனைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் சென்னையில் உள்ள தலைமை வனவிலங்கு பாதுகாவலருக்கு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தின் சாரம்:-
கடந்த ஆறு மாத காலத்தில் வரப்பாளையம், பன்னிமடை, பெரியதடாகம், சின்ன தடாகம் போன்ற பகுதிகளில் தக்காளி, சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்களைக் கும்கி யானைகள் சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து விவசாயிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் காட்டு யானைகளை மனித வாழிடங்களில் இருந்து அப்புறப்படுத்தி முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் காட்டு யானையை கிராமத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (RRT) உறுப்பினர் ஒருவர் காட்டு யானையால் கொல்லப்பட்டார். ஆனால், அந்தச் சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக மட்டுமே மாவட்ட ஆட்சியர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மாவட்ட வன பாதுகாப்பாளருக்கும், தலைமை பாதுகாப்பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.