கோவை: கணுவாய் அருகே செங்கல்சூளையில் பணியாற்றி வந்த கணவன்-மனைவியை காட்டு யானையிடம் இருந்து வனத்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
கோவை: கணுவாய் அருகே செங்கல்சூளையில் பணியாற்றி வந்த கணவன்-மனைவியை காட்டு யானையிடம் இருந்து வனத்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
கணுவாய் அடுத்த கலப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் வாணி செங்கல்சூளை இயங்கி வருகிறது. இங்கு மதுரையைச் சேர்ந்த முத்துசாமி மற்றும் அவரது மனைவி பணயம்மாள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு செங்கல்சூளைக்குள் புகுந்த காட்டு யானைகள் அவர்களது குடியிருப்பை சேதப்படுத்தியது.

இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானையை அருகில் உள்ள வனப்பகுதியிக்கு விரட்டினர். சரியான நேரத்தில் வனத்துறையினர் அங்கு சென்றதால் இருவரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர்.