கோவை : கோவை மாநகராட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை : கோவை மாநகராட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியின் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களான ரூ. 3 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான 1,600 பால் பவுடர்களும், ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான 1,800 நைட்டிகளும், ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான 1,800 வேஷ்டிகளும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 2,000 பெட்சீட்டுகளும், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 2,000 துண்டுகளும், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 5,000 மெழுகுவர்த்திகளும், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 5,000 தீப்பெட்டிகளும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 1,600 பரமாடாஸ்களும், ரூ.31 ஆயிரத்து 250 மதிப்பிலான 2500 டூத்பிரஸ்களும், ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 6,000 பிஸ்கட்களும், ரூ.62 ஆயிரத்து 500 மதிப்பிலான 2,500 நேப்கின்களும், ரூ.51 ஆயிரத்து 250 மதிப்பிலான 1,250 எண்ணிக்கைகள் கொண்ட பிளீச்சிங்பவுடர்களும், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 4000 தண்ணீர் பாட்டில்களும் ஆகமொத்தம் 12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், கோவை மாநகராட்சி மூலமாக தண்ணீர் லாரிகள், தண்ணீர் பாட்டில்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவை புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் மூலமாக நோய் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்காக திரவ குளோரின் கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநருடன் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கொடுக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இதனிடையே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலின் காரணமாகப் பாதிக்கப்பட்டு, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பால், பிரட் உள்ளிட்ட அத்தியவாசிய நிவாரணப் பொருட்களை கோவையைச் சேர்ந்த தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
