9 லட்சம் இணைப்புகளுக்குக் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டம்

கோவை : அடுத்த எட்டு ஆண்டுகளில் கோவையில் உள்ள 9 லட்சம் இணைப்புகளுக்கு பைப் மூலம் எரிவாயு இணைப்புகள் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை : அடுத்த எட்டு ஆண்டுகளில் கோவையில் உள்ள 9 லட்சம் இணைப்புகளுக்கு பைப் மூலம் எரிவாயு இணைப்புகள் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு - பாண்டிச்சேரி சில்லறை வர்த்தக பிரிவின் முதன்மை பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன் கோவை தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது :- 2017-18 ஆண்டில் 200 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் வர்த்தகம் நடைபெற்று இருக்கிறது. இதில், 50 சதவீதம் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவையில் மட்டும் 24 லட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. சுமார் 11 லட்சம் சமையல் கேஸ் இணைப்புகள் உள்ளன.

பெட்ரோல் நிலையங்களில் இயற்கை எரிவாயுக்கென மையங்கள் அமைத்து வாகனங்களுக்கும், பைப் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயன்படுத்த முடியும். இதற்காக நடைபெற்ற டெண்டர்களில், கோவை மற்றும் சேலம் பகுதிகளில் குழாய் மூலம் எரிவாயு அமைக்கும் டெண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த டெண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் எடுத்தற்காக கொடிசியா வளாகத்தில் வரும் 22-ம் தேதி விழா நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி வீடியோ கான்பிரசன்ஸிங் மூலம் இதில் கலந்து கொள்கிறார். 

இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதும், அதை மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்வதும் எளிது. மற்ற மாநிலங்களில் வீடுகள், பெட்ரோல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவது புதிதாக இருக்கும். ஆனால், விரைவில் பழகிக் கொள்வார்கள். 

கோவையில் உள்ள 11 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளில், 9 லட்சம் இணைப்புகளுக்கு அடுத்த 8 வருடத்தில் பைப் மூலம் இணைப்புகள் கொடுக்கும் திட்டம் உள்ளது. புதிதாக பைப்லைன் போடுவதற்கு மட்டுமே எதிர்ப்புகள் இருக்கும் என தோன்றுகிறது. ஏற்கனவே, போடப்பட்டுள்ள பைப்லைன்களின் அருகிலேயே புதிய குழாய் இணைப்புகள் அமைத்து எரிவாயுவைக் கொண்டு வரலாம் என முடிவு செய்திருக்கிறோம், என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...