சென்னை : கஜா புயல் தாக்குதலால் நிலைகுலைந்து போய் கிடக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவுமாறு பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தைத் தாக்கிய ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.
மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே, கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ளது. சொட்டுநீர் பாசனத்தில் மறுசாகுபடி செய்ய ரூ.75,000 அளிக்கப்படும். சேதமடைந்த மரத்திற்கு ரூ.500 அளிக்கப்படும். பயிர்களை மறுசாகுபடி செய்ய 40-50% மானியம் அளிக்கப்படும். முந்திரி பயிர்சேதங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000 அளிக்கப்படும். சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் அளிக்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு 75% மானியம் அளிக்கப்படும், 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,92,500 நிவாரணம் அளிக்கப்படும்.
மேலும், திரையுலகித்தினர், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் என பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கஜா புயல் கடுமையான மற்றும் பெரிய அளவிலான சேதாரங்களை உண்டாக்கியுள்ளது. லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், சாலைகள், தென்னை மரங்கள், வேளாண் பயிர்கள், குடிநீர் திட்டங்கள், வீடுகள், பொது கட்டடங்கள் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பேரழிவினை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிதியினை அளிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த இருக்கிறது.
இதனிடையே, கஜா புயல் தாக்குதலால் நிலைகுலைந்து போய் கிடக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவுமாறு பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது ;- ஜெயலலிதா வழியில் வந்த அரசு, வேளான் பெருமக்கள், மீனவர்கள், ஏழை எளியோர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் அரசாகும். மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டுகிறேன்.மேலும், தற்போது தமிழ்நாடு அரசால் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன், இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.