நீலகிரி : உதகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விவேக், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மலர் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக இருப்பதால் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனத்தில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், இந்த சாலைகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்தில் பல நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, இவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா ஆகியோர் பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். மேலும், இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் விவேக், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். அதோடு, ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கு மலர் கொடுத்து ஊக்கப்படுத்தப்படுத்தினர்.