கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும் : கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள மாநிலம் துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள மாநிலம் துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ரூ. 25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர். மேலும், ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். விஜய் சார்பில் ரூ.6.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டு, மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரளா துணைநிற்கும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'குடிநீர், மெழுகுவர்த்தி, உணவுப் பொருட்கள், புது துணிகள் உள்ளிட்டவை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளில் கே.எஸ்.டி.எம்.ஏ. உறுதுணையாக இருக்கும்,' இவ்வாறு அவர் கூறினார். 

கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட போது, நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்பு பணிகளில் உதவிய பிற மாநிலங்களில், தமிழகம் பெரும் பங்கு ஆற்றியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...