தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை : தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை : தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றவியல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், தமிழகம் முழுவதும், வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில், கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்திற்கு தீ வைத்தனர். பேருந்தில் பயணித்த மூன்று மாணவியர் தீயில் கருகி சாம்பலாகினர். இது தொடர்பாக, பேருந்து எரிப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். 



வழக்கு விசாரணையில், அ.தி.மு.க.வை.ச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில், தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஒப்புதல் அளித்தார். அதன்படி, 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 

இதையடுத்து, அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர், வடவள்ளி சாலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவின் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று பிற்பகலில் தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து மிகுந்த வடவள்ளி சாலையில் போராட்டம் நடத்தினர். 



"இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு முன்னதாக, தர்மபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்த ஆளுநர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டுவது ஏன்..?," என அவர்கள் கேள்வி எழுப்பினர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...