கோவை: கோவையை சேர்ந்த சித்திரம் கிராஃப்ட் சாக்லெட்ஸ் நிறுவனத்திற்கு சர்வதேச சாக்லெட்களுக்கு விருதுகள்- 2018 விழாவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பான 'மேங்கோ லெஸ்சி சாக்லெட் பார்' நம் நாட்டிற்கு இந்த விருதினை பெற்றுள்ளது. அக்டோபர் முதல் நவம்பர் இரண்டாவது வாரம் வரை இத்தாலியில் இந்த சாக்லெட் போட்டிக்காக வைக்கப்பட்டது. சர்வதேச அளவிலான நடுநிலையாளர்கள் சிறந்த சாக்லேட்டுகளை தேர்வு செய்தனர்.

அதன்படி, கடந்த 17-ம் தேதி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சர்வதேச அளவில் சிறந்த சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது வழங்கும் தைவானில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், புதிய தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகப்படுத்திய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டன. அந்த வகையில், சித்திரம் சாக்லெட் நிறுவனத்திற்கு ஆசிய மற்றும் பசிபிக் அளவில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து சாக்லெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரி அருண் விசுவநாதன் கூறுகையில், "இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எங்களது சாக்லெட்டுகள் அனைத்தும் எந்த வகையான ரசாயன கலப்படமும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சாக்லெட் வகை இது.

சர்வதேச அளவில் இந்திய சுவை கொண்ட சாக்லெட்டுகளுக்கு நிறைய டிமாண்ட் உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இந்த சாக்லெட் விற்பனையை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்." என்றார்.