கோவை : கம்பளம், சால்வை, லுங்கி உள்ளிட்ட 11 குறிப்பீடுகளுடைய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால், சிறை தண்டனை விதிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கவும் மத்திய அரசு ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ஐ இயற்றியுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தும் வகையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் அமலாக்கப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, திருப்பூரில் உதவி அமலாக்க அலுவலகம் 1998 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களான பேட்டு பார்டருடன் கூடிய சேலை, கட்டுக்கட்டி சாயமிடப்பட்ட நூலைக் கொண்டு உற்பத்தி செய்த சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடைத்துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க் ஆகிய ரகங்களில் ஒருசில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது சட்ட மீறல்களாகும்.
எனவே, இந்த 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்பவர்கள் மீது காவல்துறை மூலம் அதிகபட்சமாக 6 மாத கால சிறைத் தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5,000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.