திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது

திருப்பூர்: திருப்பூரில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 30-ந்தேதி சிறுமியின் தாய் பனியன் கம்பெனிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் ரங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், 4 வயது குழந்தையை வாயில் துணியை வைத்து அடைந்து வீட்டின் மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், மர்ம உறுப்பு மற்றும் வாய் பகுதிகளில் ரத்த காயங்களுடன் அழுத நிலையில் மாடியிலிருந்த வந்த சிறுமி, தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் கதவை தட்டியுள்ளது. 

இதனிடையே, சிறுமி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு மக்கள், குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தந்தை ரங்கநாதன் தான் பாலியல் பலாத்காரம் செய்தது என்பது தெரிய வந்தது, இதனையடுத்து, போலீசார் ரங்கநாதனிடம் நடத்திய விசாரணையில், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அனுப்பர்பாளையம் போலீசார் ரங்கநாதனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...