கோவை : கடந்த 2014-ம் ஆண்டு குடிபோதையில் ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த சீனிவாசன், திருச்சியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் கோவையில் தங்கி சமையல் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, கோவை அரசு மருத்துவமனை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராற்றில் சீனிவாசனை செல்வராஜ் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கொலை வழக்கு கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.