செல்போனை சரிசெய்து கொடுக்காமல் இழுத்தடிப்பு : ரூ. 5,000 இழப்பீடு வழங்க பழுதுபார்க்கும் மையத்திற்கு உத்தரவு

கோவை : செல்போனை சரி செய்து கொடுக்காமல் இழுத்தடித்தால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியருக்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு செல்போன் பழுது பார்க்கும் மையத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : செல்போனை சரி செய்து கொடுக்காமல் இழுத்தடித்தால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியருக்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு செல்போன் பழுது பார்க்கும் மையத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவையை அடுத்த சரவணம்பட்டி விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 2014-ஆம் ஆண்டில் கோவையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ரூ. 4,300-க்கு ஒரு செல்போன் வாங்கினார். சில நாட்களில் அந்த செல்போனில் உள்ள பட்டன் சரியாக இயங்கவில்லை. எனவே, அவர் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவன பழுதுபார்க்கும் மையத்தில் அந்த செல்போனை கொடுத்து பழுது நீக்கி தருமாறு கூறினார்.

அதை வாங்கிய ஊழியர்கள் ஒருமணி நேரத்தில் பழுது நீக்கி தருவதாக கூறிவிட்டு, இரண்டு நாட்கள் ஆகியும் அந்த செல்போனை பழுது நீக்கிக் கொடுக்கவில்லை. பலமுறை அந்த மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அவர் இதுகுறித்து கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, அவர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் ரூ. ஒரு லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ள தனது தீர்ப்பில், குறிப்பிட்ட நேரத்துக்குள் வாடிக்கையாளருக்கு செல்போனை பழுது நீக்கி கொடுக்காமல் இருந்தது சேவை குறைபாடாகும். எனவே, அவருக்கு அந்த செல்போனின் தொகையான ரூ. 4,300-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும். மன உளைச்சல் மட்டும் இழப்பீடாக ரூ. 5,000 மற்றும் வழக்கு செலவுக்காக 3 ஆயிரத்தை பழுதுபார்க்கும் மையம் வழங்கவேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...