கஜா புயலால் பாதிப்பு : திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 30 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

திருப்பூர் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான முதல்கட்ட நிவாரணப்பொருட்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி அனுப்பி வைத்தார்.


திருப்பூர் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான முதல்கட்ட நிவாரணப்பொருட்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி அனுப்பி வைத்தார்.



திருப்பூர் - பல்லடம் சாலையில் அமைந்துள்ள இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 



அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி பேசியதாவது :- முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்டமாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான அரிசி, தண்ணீர் பாட்டில்கள், உயிர்காக்கும் மருந்துகள், பால் பவுடர், பற்பசை, போர்வைகள், சானிட்டரி நாப்கின்கள், டீ-சர்ட்டுகள், பிஸ்கட்டுகள் மற்றும் பாக்குமட்டையிலான தட்டுக்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

மேலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அதிகளவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு முன்வந்து, பல்லடம் சாலையில் அமைந்துள்ள இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் வழங்கலாம். இல்லையெனில், 0421-2971199 அல்லது 1077 என்னும் தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 



இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா இராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மற்றும் துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...