கோவை : குனியமுத்தூர் அருகே பெண்ணின் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குனியமுத்தூர் கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்தவர் தீபா. இவர் கடந்த 30.7.2015 அன்று ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குனியமுத்தூர் வெற்றிலைகார வீதியைச் சேர்ந்த அப்பாஸ் வயது (30), நிஷார் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 7-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது அப்பாஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் ஏற்கனவே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். நிஷார் குற்றத்தை ஒப்புக் கொள்ளாததால், அவர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் பாண்டி தீர்ப்பு வழங்கினார்.