திருப்பூர்: இந்திய அரசு ரஷ்யாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் மற்றும் தொழில்துறை செயலர் டாக்டர்.அனூப் வாத்வான் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரஷ்யா கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில் ரூ.241 கோடிக்கு பின்னலாடைகளும் , ரூ.295 கோடிக்கு நெசவு ஆடைகளையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. குளிர்காலம் தொடங்கியதால் அதிகளவு வெம்மையான ஆடைகளை ரஷ்யா அரசு இறக்குமதி செய்யும் வாய்ப்பு உள்ளது.

எனவே, திருப்பூர் போன்ற பின்னலாடை நகரங்கள் செயற்கையிழை ஆடைகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே, இந்திய அரசு அர்மீனியா, பெலாரஸ், கஜக்கஸ்தான் மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய யுரேஷியா பொருளாதார யூனியன் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ரஷ்யாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்வது திருப்பூர் பின்னலாடைத்துறை ஏற்றுமதிக்கு அதிக பயனளிக்கும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.