கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று பேர் வரை பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் பலியாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் ராஜ் என்பவரது மனைவி பேபி (22). இவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் கடந்த 17-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல பொள்ளாச்சியைச் சேர்ந்த காளிமுத்துவின் மனைவி வீரம்மாள் (50). இவரும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.