தொட்டியில் விழுந்த குட்டி நாயை மீட்ட தீயணைப்புத் துறையினர்: கோவையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

கோவை: பீளமேடு அருகே 15 அடி ஆழத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்த நாய்க் குட்டியை தீயணைப்புத் துறையினர் குழந்தையைப் போல மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: பீளமேடு அருகே 15 அடி ஆழத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்த நாய்க் குட்டியை தீயணைப்புத் துறையினர் குழந்தையைப் போல மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் பீளமேட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி எதிரே ஒரு வீடு வாங்கியுள்ளார். மேலும், அந்த வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டவும் திட்டமிட்டிருந்தார்.

ஆதலால் இந்த வீட்டை பராமரிப்பு இல்லாமல் பூட்டி வைத்திருந்ததால், அந்த வீட்டின் முன் பகுதியில் இருந்த 15 அடி ஆழம் 15 அடி அகலம் கொண்ட தண்ணி தொட்டி திறந்து கிடந்தது. அதில் குப்பைகள் நிறைந்து கழிவுகள் தேங்கி இருந்தன.

இந்தநிலையில், நேற்று காலையில் அந்த பகுதியாக வந்த நாய் ஒன்று தவறி தொட்டிக்குள் விழுந்தது. காலையிலிருந்து இரவு வரை நாய் கத்திக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 10 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர், ஏணியை உள்ளே அமைத்து உடலில் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு, நாய்க்கு தின்பண்டங்கள் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். நாய்க்கு உணவு கொடுத்து பசியாற்றி அதை சமாதானப்படுத்தி, கயிறு கட்டி ஒரு குழந்தையை மீட்பது போல மீட்டனர்.

இந்த சம்பவங்களை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...