நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் யானை மிதித்து மாதவன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குரும்பர் பள்ளத்தைச் சேர்ந்த பொம்மன் என்பவரின் மகன் மாதவன். இன்று காலை மசினகுடி அருகே உள்ள பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த யானை துரத்திச் சென்று தாக்கியதில் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் கூடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.